Tamil Nadu Assembly Election: Inviting candidates

வணக்கம்.

மக்கள் முன்னேற்ற செயல் கட்சி – ACTION PARTY FOR PEOPLES PROGRESS எனும் பதிவு செய்யப்பட்ட புதிய அரசியல் கட்சி மூலம் உங்களுடன் பேச வாய்ப்பு கிடைத்தமைக்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

எனது பெயர் ஜான் லோப்பஸ். மூத்த செய்தியாளரும், தகவல் அறியும் உரிமை ஆர்வலருமான நான் மக்கள் முன்னேற்ற செயல் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றிருக்கிறேன்.

நான் உங்களில் ஒருவன்தான். எமது கட்சியின் உறுப்பினர்கள் உங்களைப் போன்ற சாதாரண எளிய மக்கள்தான்..  அரசியல்வாதிகள் அல்ல;

வாழ்க்கையின் மேல்மட்டத்தில் இருப்பவர்களுக்கு கீழ்மட்டத்தில் என்ன நடக்கிறது என்பது தெரியாது. எளிய மக்களுக்குத்தான் அந்த வேதனைகள் தெரியும்.

பெரிய பதவிகளில் இருப்பவர்களும், பணக்காரர்களும் தலையை மேலாகவே பார்ப்பார்களே தவிர குனிந்து பார்ப்பதில்லை; குனிந்து பார்த்தால்தான் அடித்தட்டு மக்களின் நிலைமை, வாழ்க்கைத்தரம் எப்படி நிலைகுலைந்து நிராதரவாக உள்ளது என்று தெரிய வரும்.

பல சமுதாயத்தினர் ஒடுக்கப்பட்ட மக்களாகவே இன்னமும்  இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு புதிய விடியலைத்  தரவே மக்கள் முன்னேற்ற செயல் கட்சி தொடங்கப்பட்டுள்ளது.

இது ஒரு எளிய சாமானிய மக்களின் கட்சி. சாதாரண மக்களே இதன் உறுப்பினர்களாக உள்ளார்கள். சாதாரண மக்களே இதனை நிர்வகிக்கிறார்கள்.

குற்றப்பின்னணி இல்லாதவர்கள் இந்த கட்சியில் இடம் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிட்டு சொல்லத்தக்கது.

நாட்டையும், தமிழ் நாட்டையும் மாறி மாறி ஆண்டு மக்களை நோகடித்தவர்கள் நோகடித்துக்கொண்டிருப்பவர்கள் ஆகியோரின் அரசியல் சாயம் தற்போது கலைந்துவிட்டது. அவர்கள் யார் என்று மக்கள் தெரிந்துகொண்டார்கள்… விழித்துக்கொண்டார்கள்

பல கட்சிகள் சாதி அடிப்படையிலும் இன்னும் சில மத அடிப்படையிலும், வேறு சில கட்சிகள் ஏற்கனவே உள்ள சாதி அல்லது மத அடிப்படையிலான கட்சிகளுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உறவும் வைத்துள்ளன. ஆக, மக்களுக்கு நல்லது நடக்கும், ஒரு விடியல் கிடைக்கும் என்பது கானல் நீராகிவிட்டது.

அன்பார்ந்தவர்களே மாற்றத்திற்கான நேரமிது; மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். ஏமாற்றப்பட்டு விட்டோம் என்ற அங்கலாய்ப்பு இருந்தாலும் இனி ஏமாற மாட்டோம் என்று கட்டியம் கூறும் விதமாக மக்கள் மனநிலை மாறி உள்ளது.இதைத்தான் மக்கள் முன்னேற்ற செயல் கட்சி அடிப்படையாகக் கொண்டுள்ளது

இந்த மனநிலையை முன்னெடுத்துச் சென்று அவர்களுடைய வாழ்க்கையை மேம்படுத்தும் விதமாக மக்கள் முன்னேற்ற செயல் கட்சியின் அனைத்து நடவடிக்கைகளும் இருக்கும் என்பதை நாங்கள் உறுதிபடத்தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்களோடு ஒன்றிணைந்து செயல்பட எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்; எங்களுக்கு ஆதரவு தாருங்கள்.

உங்களோடு இணைந்து தமிழ்நாட்டை மாற்றுவோம். எங்களுக்கு ஆசி வழங்குங்கள்.

மக்களுடைய வாழ்க்கை நிலைமையை உயர்த்தும் வகையில் தமிழ்நாட்டை மாற்றுவோம். நல்ல வழி பிறக்கும்; மாற்றம் வரும். பண்புள்ள அறிவுத்திறன்மிக்க, மக்கள் நலனில் அக்கறை கொண்ட புதியதோர் தமிழகம் விரைவில் உருவாக எங்களுக்கு ஆதரவு தாருங்கள்.

நாங்கள் பலம் படைத்தவர்களோ, அல்லது வசதி வாய்ப்பு உள்ளவர்களோ அல்ல. ஆனால் குணம் படைத்தவர்கள்.  மக்களுக்காக உழைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

இந்த கட்சியில் சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், ஓட்டுநர்கள், வீட்டு வேலை செய்வோர், கூலி வேலை செய்வோர், என பலதரப்பட்ட மக்கள் உள்ளார்கள்.

இவர்கள் வாழ்க்கையில் அன்றாடம் அடிப்பட்டு நொந்து நூலாகிப் போனவர்கள். இவர்கள்தான் இந்த நாட்டை நிர்வகிக்க வேண்டும். இவர்களுக்குத்தான் நாட்டை ஆளும் அதிகாரம் இருக்க வேண்டும். அது தான் நியாயமானது. ஆண்டாண்டு காலமாய் ஏமாற்றப்பட்டுவந்த நீங்கள்தான் மாற்றத்தைக் கொண்டுவரும் கருவிகள் என்பது உணருங்கள். 

அதனால்தான் எளிய மக்களாகிய நாங்கள், உங்களில் ஒருத்தராகிய நாங்கள் மக்கள் முன்னேற்றத்திற்கான இந்த கட்சியை தொடங்கி உள்ளோம்.

அன்பார்ந்தவர்களே தற்போதைய தமிழக சட்டப்பேரவையின்  பதவிக் காலம் வரும்  ஆண்டு

மே மாதம் 24ம் தேதி நிறைவடைகிறது.சட்டப்பேரவைக்கான தேர்தல் அதற்கு  முன்பாக நடத்தப்பட்டுவிடும்.

 மக்கள் முன்னேற்ற செயல் கட்சி இந்த தேர்தலில்   சட்டமன்ற தொகுதிகளிலும் அனைத்திலும் வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்து உள்ளது.

தமிழக சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலில்  போட்டியிட  விருப்பமுள்ளவர்கள்

உடனடியாக 9444484517.என்ற எண்ணில் எம்மை தொடர்புகொள்ள கேட்டுக்கொள்கிறோம்.

சமுதாயத்திற்கு ஒருவர், தொழிலுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் வேட்பாளர்களை நிறுத்தலாம் என்ற யோசனை உள்ளது. எனினும் மக்களின் ஒருமித்த கருத்தின் அடிப்படையிலேயே அனைத்து செயல் நடவடிக்கைகளும் இருக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்

இந்த கட்சி – உங்கள் தேர்வு. உங்கள் குரல்.

Let this party be your choice, your voice.

உங்களுடைய கருத்துக்களை நாங்கள் அறிய விரும்புகிறோம். actionparty.in@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் நீங்கள் கருத்து தெரிவிக்கலாம் அல்லது 9444484517 என்ற எண்ணில் குறுஞ்செய்தி அல்லது வாட்சப் (WhatsApp ) செய்தி அனுப்பலாம். அனைத்தையும் மதிப்பளித்து ஏற்போம்

நன்றி -வணக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *